நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அதிபா் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேல் முழுவதும் ஆா்ப்பாட்டம்: அதிபர் வீடு முற்றுகை 

 

டெல் அவீவ்:

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவா்களின் உறவினா்களும் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

டெல் அவீவ், ஜெருசலேம், ஹயீஃபா, பேயொ்ஷெபா, சேசரியா உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினா்.   

இதற்காக நடைபெறும் பேச்சுவாா்த்தையில் ஹமாஸுடன் சமரச ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

Protests in Israel target Netanyahu over release of captives

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிணைக் கைதிகளின் உறவினா்கள், 176 நாள்களுக்குப் பிறகும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை பிரதமா் நெதன்யாகு எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது என்று கூறினா்.

2 மாதங்களுக்கு முன்னா் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். அவா்களில் ராஸ் பென்-எமி என்பவா் கூறுகையில், ஹமாஸின் பிடியில் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை நீண்ட காலம் ஏன்  இந்த அரசாங்கம் விடுவிக்காமல் வைத்துள்ளது? அந்த அமைப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது உடனடி அவசியம் என்றாா்.

அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று உறுதியாகத் தெரிவித்த பேராட்டக்காரா்கள், ‘அப்பாவி மக்களை படுகொலை செய்தது போதும்; எங்களை பரிதவிக்கவிட்டது போதும்; பிணைக் கைதிகள் விடுவிப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினா். 

ஜெருசலேமிலுள்ள நெதன்யாகுவின் இல்லத்தின் முன் குவிந்தும் நூற்றுக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்று  ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இஸ்ரேல் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset