நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் தலைவர்கள் பங்கேற்பு

புதுடில்லி:

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

மதுபான விற்பனைக் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் சுமார் 10 நாள்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர்களோடு பலர் இன்று சாலையில் பேரணி நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர். அதனையொட்டி அதிக விழிப்புநிலையில் இருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் கெஜ்ரிவால் கைதானதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை எதிர்த்தரப்பினர் கடுமையாக குறைகூறியுள்ளனர்.

பொறுப்பில் இருக்கும்போதே முதல்வர் ஒருவர் கைதாகியிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

அவரின் கைது நடவடிக்கை குறித்து அமெரிக்காவும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த விவகாரம் குறித்துத்   நரேந்திர மோடியின் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று அவை அறிவுரை கூறியுள்ளன.

'இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் நடத்தப்படும்  போராட்டத்தில்  மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஜாா்கண்ட் முதல்வா் சம்பாய் சோரன், சரத் பவாா், உத்தவ் தாக்கரே,அகிலேஷ் யாதவ்,தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொள்கின்றனா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset