நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸுக்கு வருமான வரித்துறை ரூ.1,823 கோடி அபராதம்

புது டெல்லி:

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி அபராதத்தை  வருமான வரித்துறை விதித்துள்ளது.

2018 -19ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் 45 நாள்கள் தாமதம் செய்ததற்காக அக்கட்சியின்  வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

ரூ.210 கோடி அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டிருந்தது. காங்கிரஸின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித் துறை எடுத்துள்ளது என்றும் மீதமுள்ள  தொகையை பயன்படுத்த வருமான வரித் துறை அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக் கோரி, காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,200 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்குப் பிந்தைய கையூட்டுகள், போலி நிறுவனங்கள் உள்ளிட்ட வழிமுறைகளை அக்கட்சி பின்பற்றியுள்ளது என்றார்.

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் அட்டையை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி அபராதம் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset