நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பணமில்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புது டெல்லி:

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி அல்லது ஆந்திராவில் இருந்து நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்திருந்தது.

தமிழகத்தில் தென் சென்னை தொகுதியில் அவர் போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக களப் பணியாற்றி வந்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து கொண்டதால் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் போட்டியிட பின்வாங்கினார்.

புதுச்சேரி, ஆந்திராவில் அவர் போட்டியிடுவதற்கான போதிய ஆதரவு இல்லை.

பாஜக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் கடைசி வரை இடம்பெறவில்லை.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,, பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்தேன். இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால், நான் போட்டியிடவில்லை என்று தலைமையிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்தை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து பல்வேறு எதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset