நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை:

கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது ராஜா (28), ரமீஷ் ராஜா (27) என்ற இரண்டு பயணிகள் கையில் பெரிய பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்துள்ளனர்.

மேலும், அந்த கூடைகளில் காற்று செல்வதற்கு வசதியாக துவாரங்கள் இருந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அந்த இரு பயணிகளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

அதோடு, அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்த இரு கூடைகளிலும், வெள்ளை நிறத்தில் உள்ள அபூர்வ வகை கிளிகள் 4 இருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த 2 பயணிகளையும் வெளியே விடாமல் நிறுத்தி வைத்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், நாங்கள் மலேசியாவில் இருந்து, இந்த அபூர்வ வகை வெள்ளைக் கிளிகளை எங்களுடைய சொந்த உபயோகத்திற்காக வாங்கிக் கொண்டு வருகிறோம். 

இது ஆபத்தான பறவை அல்ல. வீட்டில் செல்லமாக வளர்க்கக்கூடிய கிளிகள் போன்ற பறவைகள் தான். இவைகளை இரண்டு ஜோடிகளாக நாங்கள் வாங்கி வந்திருக்கிறோம்.

மேலும், இந்த கிளிகளை இனவிருத்தி செய்ய வைத்து, இந்தியாவில் உற்பத்தி செய்வது தான் எங்கள் நோக்கம். அதுமட்டுமின்றி திரைப்பட படப்பிடிப்பு, குறிப்பாக சின்னத்திரை, யூடியூப் சேனல் போன்றவைகளில் இதை பயன்படுத்துவோம் என்றனர்.

ஆனாலும், சுங்க அதிகாரிகள் அதை முழுமையாக நம்பாமல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் விரைந்து வந்த மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த அரிய வகை வெளிநாட்டுக் கிளிகளை ஆய்வு செய்தனர்.

அதோடு, அந்த வெளிநாட்டுக் கிளிகளை கடத்தி வந்த பயணிகளிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset