நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய  திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்

கோலாலம்பூர்:

செராஸ் கொக்ரேய்ன் ஜாலான் நக்கோடா  யூசோப் 1 ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 13 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று ஆலயத் தலைவர் எம். அருள் ஆனந்தன் தெரிவித்தார்.

எச்ஆர்டி திட்டத்தினால் முன்பு கொக்ரோய்ன் பள்ளி அருகில் இருந்த இந்த கோவில் இப்போது ஜாலான் நக்கோடா யூசோப் 1 என்ற இடத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் அருகில் பிபிஆர் பெர்காசா குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் பூர்த்தி அடையும் வகையில் உள்ளது.

ஆலயத் திருப்பணிக்கு இன்னும் ஒரு லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த ஆலயம் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் ஒரு தாய்க்கோவிலாக இது விளங்கும் என்று அவர் சொன்னார்.

இலக்கயவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, அவரின் செயலாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்திற்கு தலைமையேற்கும்படி அழைப்பு விடுக்கப்படும் என்றார்

மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற பொதுமக்கள் நன்கொடை வழங்கி பேருதவி புரியும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நன்கொடை வழங்க விரும்புவோர் 
RHB Bank 21419200045199 கோவில் வங்கி கணக்கில் நிதியை செலுத்தலாம் என்று அவர் கூறினார். தொடர்புக்கு 011-36639665

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset