நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிமெண்ட் லாரி கவிழ்ந்தது: ஆடவர் உயிரிழந்தார்

சிபு:

ரோஸ்லி டோபி தேசிய வகை இடைநிலைப்பள்ளிக்கு அருகிலுள்ள ஜாலான் டெஷோன் சாலையில் நடந்த சாலை விபத்தில், சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விழுந்ததில், வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

மதியம் சுமார் 12 மணியளவில் நடந்த இந்த விபத்தில், லீ டெக் கீ (60) என்பவர் ஓட்டிச் சென்ற தொயோத்தா ஹிலக்ஸ் பிக்கப் வாகனம், கவிழ்ந்த சிமெண்ட் லாரியின் கீழ் சிக்கி நசுங்கியது.

இதனால், வாகனத்தின் உள்ளே சிக்கியிருந்த அவர் கடுமையாகக் காயமடைந்து மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டுளார்.

மதியம் 12.18 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, சுங்கை மேரா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகச் சராவாக் தீயணைப்பு, மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மைய பேச்சாளர் கூறினார்.

தனியார் நிறுவனத்திலிருந்து இரண்டு கிரேன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சிமெண்ட் லாரி அகற்றப்பட்டது.

பின்னர், பாதிக்கப்பட்டவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரின் உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset