நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசிய பசிபிக் மூலோபாய சிந்தனையாளர்களான கேஎஸ்ஐயின் பங்கை பிரதமர் பாராட்டினார்

புத்ராஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஆசிய, பசிபிக் வட்டார மூலோபாய சிந்தனைக்கான மையமாக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான ஆசிய பசிபிக் கேஎஸ்ஐ  நிறுவன தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

கேஎஸ்ஐ மூலோபாய சிந்தனை, அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறை, தொடர்புடைய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் பொருளாதார மன்றங்களை நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பிரதமர் முகநூல் பதிவில் கூறினார்.

இந்த கூட்டம் அடிப்படை உரையாடல், மூலோபாய சிந்தனை, புதுமை மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கேஎஸ்ஐயின் நோக்கம், விருப்பங்களை அறிமுகப்படுத்த ஒரு முக்கியமான இடமாக அமைந்தது.

மேலும் மடானி மலேசியா நிகழ்ச்சி நிரலுடன் குறிப்பாக தேசத்தைக் கட்டியெழுப்புதல், நேர்மையுடன் கூடிய தலைமைத்துவ மேம்பாடு, மக்களின் நிலையான நலனில் ஒத்துப்போகும் சாத்தியமான மூலோபாய ஒத்துழைப்பு பற்றிய விவாதங்களையும் நான் பாராட்டுகிறேன் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கேஎஸ்ஐ தலைவர்கள் டான்ஸ்ரீ மைக்கேல் இயோ, தலைவர் டான்ஸ்ரீ மஜித் கான், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது இக்பால் ராவ்தர், கேஎஸ்ஐ அனைத்துலக ஆலோசனைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் முனீர் மஜித், ஆலோசகர் டத்தோ ரமேஷ் கோடம்மல், நிர்வாக இயக்குநர் கரோலின் சியோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset