செய்திகள் மலேசியா
காலி வீட்டில் RM2.03 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: சுங்கத்துறை
குவந்தான்:
பஹாங் மாநில சுங்கத் துறை (JKDM) ஜனவரி 22 அன்று, தெமர்லோ மாவட்டம் மெந்தகாப் பகுதியில் உள்ள ஒரு காலியான தரை வீட்டில் இருந்து, சுமார் RM2.03 மில்லியன் மதிப்புள்ள 44.426 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது.
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 'methamphetamine', 'Erimin 5' உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பல பைகளில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக JKDM இயக்குநர் முகமது அஸ்ரி சேமான் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலியான வீடுகளைப் போதைப்பொருள் சேமிப்பு, விநியோக மையங்களாக பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
“2026 ஆம் ஆண்டுக்கான Ops Petasan Siri 1/2026 நடவடிக்கையின் கீழ், சிறப்பு விசாரணை பிரிவு (CSK), கிழக்கு மண்டலம் 2 (பஹாங்) ‘நியூக்ளியஸ் கோப்ரா’ அணியின் உதவியுடன், மதியம் 12.40 மணிக்கு இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) பிரிவு 39Bன் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், குறைந்தது 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்,” என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 10, 2026, 10:13 pm
ஆலய விவகாரங்களுக்கு தீர்வுக்கான பிரதமரிடம் மகஜர் வழங்கப்படும்
February 10, 2026, 9:22 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மாணவர்களை டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டினார்
February 10, 2026, 9:21 pm
இந்து மக்கள் தொகையை விட அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை அதிகம்: சிலாங்கூர் சுல்தான்
February 10, 2026, 9:20 pm
ஆசிய பசிபிக் மூலோபாய சிந்தனையாளர்களான கேஎஸ்ஐயின் பங்கை பிரதமர் பாராட்டினார்
February 10, 2026, 9:18 pm
சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
February 10, 2026, 9:17 pm
பிரதமரின் பத்துமலை வருகை இந்துக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
February 10, 2026, 9:16 pm
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
February 10, 2026, 4:03 pm
வீட்டில் புகுந்து பெண்ணின் நகையைக் கொள்ளையடித்த நபர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
February 10, 2026, 3:57 pm
