நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் காலுறை விவகாரம் மீண்டும் கோபத்தை தூண்ட வேண்டாம்: மாமன்னர்

கோலாலம்பூர்:

கேகே மார்ட்டில் அல்லாஹ் காலுறை விற்கப்பட்ட விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் கேகே மார்ட் நிறுவனர் கேகே சாய் மீது ஷாஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆகையால் சட்ட நடவடிக்கை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்க்கப்பட வேண்டும்.

சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனவே எந்த தரப்பினரும் தொடர்ந்து கோபத்தைத் தூண்ட வேண்டிய அவசியமில்லை.

இந்த நடவடிக்கை தண்டிக்கப்படுவதற்காக அல்ல.

மாறாக மலேசியர்களின் உணர்திறனைப் பாதுகாக்க அனைவருக்கும் ஒரு பாடமாகவும் நினைவூட்டலாகவும் எடுக்கப்பட்டது.

நீடித்த கோபம் யாருக்கும் பயனளிக்காது. அதே வேளையில், இந்த சம்பவத்திலிருந்து சமூகம்  பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனைத்து கட்சிகளும், குறிப்பாக சமூகத் தலைவர்களும் பக்குவமாக செயல்பட வேண்டும். 

பிரிவினையைக் காட்டிலும் ஒற்றுமையை நோக்கி மக்களை  இணைக்க வேண்டும் என்று மாமன்னர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset