செய்திகள் சிந்தனைகள்
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
பெரும்பாலும் இவரை யாருக்கும் தெரியாது. தெரிந்துகொண்டுதான் என்ன பண்ணப் போகிறோம்?
ஆயினும் ஒன்று... இவரது உயர் பண்புகளுக்காகவேனும் இவரைத் தெரிந்து வைத்திருங்கள், தப்பில்லை.
இவர் பெயர் சார்லஸ் எஃப். ஃபீனி. அமெரிக்க தொழில் அதிபர்.
உலகம் முழுவதும் விமான நிலையங்களில் செயல்படும் DUTY FREE (சுங்க வரியற்ற) கடைகள் என்பது இவரது யோசனைதான்.
உலகளாவிய விமான நிலையங்களில் இயங்கும் பெரும்பாலான DUTY FREE கடைகளின் உரிமையாளரும்கூட. பெரும் பணக்காரர்.
ஆயினும் என்ன? தனது வாழ்நாளில் அவர் சம்பாதித்த முழுச் செல்வத்தையும் பயனுள்ள வழியில் செலவு செய்தார்.
ஏறக்குறைய 8 பில்லியன் டாலர்கள். முழுச் செல்வத்தையும் உலக சுகாதாரம், கல்வி, மனிதாபிமான முயற்சிகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
பின்னர் வாழ்நாளின் மீதியில வாகனமோ, எவ்வித ஆடம்பரமோ இல்லாத சாதாரண குடியிருப்பில் வசித்தார்.
மரணிப்பதற்கு முன் காலத்தால் அழியாத ஒரு சொற்றொடரை அவர் கூறினார்:
"செல்வம்.. தேவைப்படும்போது செலவிடப்படாவிட்டால் அது பயனற்றது!”
எத்துணை பொருள் பொதிந்த சொற்றொடர் இது!
மனித நேயத்தின் விலைமதிப்பற்ற மரபை இந்த உலகத்துக்கு அவர் விட்டுச் சென்றார்.
எதுவும் இல்லாமல் அவர் மரணித்திருக்கலாம். ஆனால் உத்வேகத்தையும் பெரும் தாக்கத்தையும் அல்லவா விட்டுச் சென்றுள்ளார்.
வாழ்கால உலகில் இப்படியும் சில மனிதர்கள் இருந்தார்கள் என்பதே மகிழ்ச்சிதான்.
இங்கே சிலர்..? பணத்துக்காகவும் பதவிக்காகவும் என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஊரை ஏமாற்றி உலையில் போடுகிறார்கள். அப்பாவி உயிர்களுடன் துச்சமாக விளையாடுகிறார்கள்.
எவ்வளவு அழகாக அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்:
"பிறரை விடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் எனும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி விட்டது. நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கிறீர்கள்” (102:1,2)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
