நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை

அரேபியக் குதிரைகள் என்று கேள்விப்பட்டிருப்போம். அந்தக் குதிரைகளின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா? 

உலகிலேயே பழமையான, மதிப்புமிக்க குதிரைகள் அவை. அவற்றின் தனித்துவமான தோற்றம், புத்திசாலித்தனம், சகிப்புத் தன்மை, மென்மை ஆகியவற்றால் குதிரைப் பிரியர்களின் இதயங்களை அவை கவர்ந்துள்ளன.

அரேபிய தீபகற்பம் கடுமையான பாலைவனச் சூழலைக் கொண்ட ஒரு சவாலான இடம். 

அத்தகைய சூழலில் செழித்து வளரக்கூடிய குதிரைகளை, பதாயின் பழங்குடியினர் மிகுந்த கவனத்துடன் இனப்பெருக்கம் செய்து, அரேபியக் குதிரைகளை உருவாக்கினர்.

அரபுகள் பாலைவன வாழ்வுக்கு குதிரைகளையே நம்பியிருந்தனர். குதிரைகளுடன் ஓர் உறவை வளர்த்தனர்.

அரபுகளைப் பொறுத்தவரை கெளரவம், செல்வம் ஆகியவற்றின் அடையாளம்தான் அரேபியக் குதிரைகள். அவை தங்களிடம் இருப்பதை பெருமையாகக் கருதினர்.

அரேபியக் குதிரைகள் சகிப்புத் தன்மை, சுறுசுறுப்பு, விசுவாசம், மென்மை, வேகம் போன்ற பண்புகள் கொண்டவை.

ஆபத்து காலங்களில் அரேபியக் குதிரைகள் எஜமானவர்களை விட்டுவிட்டு ஓடாது.  நெருக்கடியான சூழலில் எஜமானருக்கு முன்பாக கவசம் போன்று நின்று பாதுகாக்கும். சிலபோது எஜமானரை தள்ளிவைத்து பாதுகாக்கவும் முனையும்.

எதிர்பாராத சத்தங்கள், வேகமான அசைவுகள் போன்றவற்றை உணர்ந்து எஜமானரை எச்சரிக்கும்.

ஆபத்து வரும் திசையைக் கண்டு, அப்புறம் செல்லுமாறு எஜமானரை நோக்கி தலை திருப்பும். இடையூறு ஏற்படும்போது எதிர்கொண்டு நிற்கும்.

ஆபத்து வரும்போது தசைகளை இறுக்குதல், அலறுதல் போன்ற உடல் மொழி மூலம் எஜமானரை எச்சரிக்கும்.

முக்கியமாக… அரேபியக் குதிரைகள் நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபடாது. ஆபத்து வேளைகளில் தன்னை நம்பியவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடாது.

அந்தக் குதிரைகள் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். வெறும் சத்தியமல்ல. மாறாக அவற்றின் வீரத்தை எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள்:

"மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக! பின்னர் குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்பி, அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி, அதனால் புழுதியைக் கிளப்பி, மேலும், ஏதேனும் ஒரு கூட்டத்தின் நடுவில் திடீரென நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!” (100:1-5)

இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கும் குதிரைகளை கற்பனை செய்து பாருங்கள்.
சுப்ஹானல்லாஹ்!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset