செய்திகள் சிந்தனைகள்
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது.
’கலகத்தில் பிறப்பது தான் நீதி. மனம் கலங்காதே! மதி மயங்காதே’ என்ற கண்ணதாசனின் வரிகள் பொய்க்குமா?
திட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும்.
மனித நேயத்தோடு அணுகப்படாத எந்த திட்டமும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை.
இதையெல்லாம் எதற்கு சொல்கிறோம் என்றால், அதிகார மமதையில் இருக்கும் தேர்தல் ஆணைய மும்மூர்த்திகளின் அராஜகம் எல்லை மீறிப் போகிறது.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களை மனிதர்களாக மதிக்காததைப் போலவே, தங்களுக்காக பணியாற்றும் ஊழியர்களையுமே கூட துச்சமாக மதிக்கிறார்கள்…என்பது தான் தற்போதைய ஹைலைட்!
அதனால் தான் தமிழகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட வருவாய் துறை ஊழியர்கள் அனைவரும் SIR தொடர்பான படிவங்களைச் சேகரிப்பது, அவற்றை இணையத்தில் பதிவேற்றுவது மற்றும் மறுஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது போன்ற அனைத்துப் பணிகளையும் நவம்பர் 18 முதல் முற்றிலும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
முறையான திட்டமிடல்கள் இல்லை. ஒரு வேலை செய்வதற்கான ஆட்பலம், அதற்கான முறையான பயிற்சிகள், அந்த வேலையின் கால அளவு, அதில் ஈடுபடும் ஊழியர்களுக்கான வசதிகள், நிதி ஒதுக்கீடு, உழைப்பிற்கேற்ற ஊதியம் எதையும் பொருட்படுத்தாமல் ஏற்கனவே பணிச் சுமையில் இருக்கும் ஊழியர்களை அழைத்து, தங்கள் வேலையையும் திணித்து டார்கெட் வேறு நிர்ணயித்தால், அவர்கள் என்ன தான் செய்வார்கள்?
ஏற்கனவே தேர்தல் பணிச் சுமை அழுத்தத்தால், ராஜஸ்தானில் ஒரு பெண்ணும் ,கேரளாவில் ஒரு ஆணும் தற்கொலை செய்துள்ள துயரத்தை கணக்கில் எடுத்து தேர்தல் ஆணையம் தன் செயல்பாடுகளை மறு பரீசீலனை செய்திருக்க வேண்டும். மனித உயிர்கள் உங்களுக்கு அவ்வளவு மலிவாகிவிட்டதா?
ஊகும்…அவங்க தங்களோட பொலிடிகல் பாஸ் கொடுத்த அசைமெண்ட்டை முடிச்சாகணும். அதற்கு எத்தனை தலை போனால் என்ன? எத்தனை தாலி அறுந்தால் என்ன..? என மிருகத் தன்மையுடன் இயங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நேற்று மாலை 3 மணி வரை ( நவம்பர் 16) 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என சொல்லப்படும் தகவல் உண்மையாக இருக்க ஒரு போதும் வாய்ப்பில்லை. இது வரை 68 லட்சம் மட்டுமே வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி கொடுத்துள்ளார்கள்.
நான் விசாரித்த வரை பாதிப் பேருக்கு மேல் தங்கள் வீடுகளுக்கு யாரும் வரவில்லை. தேவிடு காத்துக் கொண்டிருக்கிறோம்…என்கிறார்கள்! தேர்தல் படிவங்கள் இது வரை கிடைக்காததில் அடியேனும் ஒருவனே!
உண்மையில் நடைமுறை சிக்கல்களையும், யதார்த்தங்களையும் கவனத்தில் கொண்டு பார்த்தால், ஆறு மாத கால அவகாசம் நிச்சயம் தேவை. தகுதியானவர்கள் விடுபடக் கூடாது. அத்துடன் வாக்காளர் படிவத்தில் தேவையில்லாத கேள்விகளையும், விபரங்களையும் தவிர்த்தால் மட்டுமே இது சிறப்பாக நடந்தேறும்.
தற்போதைக்கு தமிழக மக்களாகிய நாம் வருவாய்த் துறை ஊழியர்களின் முடிவை வரவேற்போம். இப்படி ஒரு கலகம் பிறந்தால் தான் தீர்வு கிடைக்கும்.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
