நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை

ஜப்பானில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து உலகில் இதுவரை யாரும் செய்யாத ஓர் அரிய சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான லக்கேஜ்கள் தொலைந்து போனதாகவோ அல்லது தாமதமாகிவிட்டதாகவோ புகார்கள் பதிவு செய்யப்படும் நேரத்தில்…

இந்த விமான நிலையத்தில் 30 ஆண்டுகளாக ஒரு லக்கேஜ் கூட தொலைந்து போகவில்லை எனும் அரிய சாதனைதான் அது.

கன்சாய் விமான நிலையம் தொடர்ந்து 30 வருடங்களாக இந்த சாதனையை தக்க வைத்துள்ளது. ஒவ்வொரு செயலிலும் ஜப்பானியர்கள் வெளிப்படுத்தும் துல்லியத்தையும் ஒழுக்கத்தையும் இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் நுணுக்கமான மனித ஆற்றலும் ஒருங்கே இணைந்த அமைப்பால் இந்த வெற்றி அவர்களுக்கு சாத்தியமாகியது.

ஒவ்வொரு லக்கேஜும் ஒப்படைக்கப்பட்ட தருணத்திலிருந்து பயணியால் சேகரிக்கப்படும் வரை, அதற்கென உருவாக்கப்பட்ட தனிக் குறியீடு, உயர் பயிற்சி பெற்ற குழுவுடன் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்த சாதனைக்குப் பின்னால் மரியாதை, பொறுப்பு, சிறப்பான பணிக் கலாச்சாரம் உள்ளது. 

சிறப்பான செயல்பாட்டுத் திறன் மூலம் கன்சாய் விமான நிலையம் உலகளாவிய முன்மாதிரியாக திகழ்கிறது.

செய்வன திருந்தச் செய்தல், நன்னடத்தை ஒழுங்கு, தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம்தான் இத்தகைய சாதனையை நிகழ்த்த முடியுமே தவிர,

அதிர்ஷ்டம் மூலமோ, அடுத்தவரை பழிப்பதன் மூலமோ, குறுக்கு வழியிலோ அல்ல என்பதையும் இந்த சாதனை பறைசாற்றுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்தால் அதைத் திறம்படச் செய்வதையே அல்லாஹ் விரும்புகிறான்”. (பைஹகீ, தபரானி)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset