செய்திகள் சிந்தனைகள்
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
மனிதகுலம் சந்திக்கும் முப்பெரும் பிரச்சினைகளை அல்குர்ஆன் கூறும் முப்பெரும் தீர்வுகள் மூலம் தீர்க்க முடியும்.
1. இச்சை, மோகம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; உங்கள் தொழுகைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்.
ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்:
’’அவர்களுக்குப் பின்னர் சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய சந்ததியில் தோன்றினார்கள். அவர்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை வீணாக்கினார்கள்”. (19:59)
2. துன்பம், தோல்வி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; உங்கள் தாயுடன் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்.
ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்:
’’மேலும் என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். முரடனாகவும், துர்பாக்கியம் உடையவனாகவும் என்னை ஆக்கவில்லை”. (19:32)
3. கவலை, துயரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால்; அல்குர்ஆனுடன் உங்கள் தொடர்பு எவ்வாறு உள்ளது? என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள்.
ஏனெனில், அல்லாஹ் சொல்கிறான்:
’’எவன் என்னுடைய நல்லுரையை புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்”. (20:124)
கூறப்பட்டவை உண்மைதான் என்று தோன்றினால் அடுத்தவருக்கும் அனுப்பிக் கொடுங்கள்.
இது நமக்குத் தேவையற்ற சமாச்சாரமாக இருக்கலாம். ஆனால் தேவைப்படுவோர் இன்னும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாம் சென்றுவிடுவோம். ஆனால் நமது நற்செயல்கள் அப்படியே இருக்கும்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
