செய்திகள் சிந்தனைகள்
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
விலங்குகளிடையே கண்மணியின் வடிவம் ஏன் மாறுபடுகிறது? சில விலங்குகளின் கண்மணிகள் செங்குத்தாகவும், மற்றவை கிடைமட்டமாகவும் இருக்கும். அதேவேளை மனிதர்களுக்கோ கண்மணிகள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
'சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளது.
கண்மணியின் வடிவம் அந்த விலங்கு வாழும் சூழலுடனும், அது வேட்டையாடக்கூடியதா அல்லது இரை தேடக்கூடியதா என்பதுடனும் நெருங்கிய தொடர்புடையது.
வேட்டையாடுபவற்றின் (பூனைகள் போன்றவை) கண்மணி செங்குத்தாக இருக்கும். அதனால் அவை மிகத் துல்லியமாக கவனம் செலுத்தவும், இரையைத் தாக்கும் போது தூரங்களைத் துல்லியமாக தீர்மானிக்கவும் உதவுகின்றன.
இரை தேடும் விலங்குகளின் (குதிரைகள், செம்மறி ஆடுகள் போன்றவை) கண்மணி கிடைமட்டமாக இருக்கும். அதனால் அவை சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கவும், தூரத்திலிருந்து ஆபத்தைக் கண்டறியவும் உதவும் பரந்த பார்வையை வழங்குகின்றன, இதனால் தப்பிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
மனிதர்களில் கண்மணி வட்டமானது. கண்களின் நிலை, தரையிலிருந்து மேலே உள்ள தலையின் உயரம் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய வடிவத்தில் அவை இருக்கும்.
இந்த வட்ட வடிவம் நமக்கு இரண்டு திறன்களை அளிக்கிறது:
1. செங்குத்து கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற பரந்த பார்வை.
2. கிடைமட்ட கண்மணிக்கு வழங்கப்பட்டதைப் போன்ற துல்லியமான தூரப் பார்வை.
உயிரினங்களின் மிகச்சிறிய விவரங்களை கூட, அவற்றின் வாழ்க்கை முறை, சூழலுக்கு ஏற்றவாறு எவ்வளவு துல்லியமாக அல்லாஹ் வடிவமைத்துள்ளான் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.
"படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன் அல்லாஹ்!” (23:14)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
