நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

 41 கிலோ போதைப்பொருள், 300 வேப் திரவப் பாட்டில்களுடன் விநியோகிப்பாளர் கைது 

மலாக்கா:

மார்ச் 24-ஆம் தேதி தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையிலுள்ள ஆயிர் கெரோ ஓய்வெடுக்கும் பகுதியில் 41.28 கிலோ கஞ்சா வகை போதைப்பொருள் மற்றும் 300 வேப் திரவப் பாட்டில்களுடன் விநியோகிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் உறுப்பினர்கள் குழு நடத்திய சோதனையில், போதைப்பொருள் விநியோகம், கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 45 வயதான அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் ஜைனோல் சாமா தெரிவித்தார். 

மலாக்காவில் போதைப்பொருள் விநியோகிப்பாளராகச் செயல்பட்டு வந்த அந்த ஆடவரைக் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உளவுத்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டப் பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் தனியாக இருந்தார்.

அவர் ஓட்டிச் சென்ற வேனைச் சோதனை செய்து பார்த்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து போதைப் பொருட்களும் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், வேப் பாட்டில்கள் வேப் மாணவர்களுக்கும் விற்கப்படுவதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேகநபர் போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றப் பின்னணியைக் கொண்டிருந்தார் என்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில் சிறுநீர் பரிசோதனை எதிர்மறையாக இருந்தது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உதவ சந்தேகநபர் மார்ச் 30-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset