நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராஜேந்திர சோழனின் சிலை தமிழர்களின் வரலாற்று சின்னம்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

சுங்கைப்பட்டாணி:

சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஷ்வரர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரர் ராஜேந்திர சோழனின் சிலை தமிழர்களின் வரலாற்று சின்னம்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இதனை பெருமையுடன் கூறினார்.

கெடா மாநிலத்தில் பிரசித்திபெற்ற சிவலிங்கேஷ்வரர் ஆலயம் சிறப்பான முறையில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் கண்டது.

இந்நிலையில் இவ்வாலயத்தின் முகப்பில் ராஜேந்திர சோழனின் சிலையை நிறுவ வேண்டும் என்ற சிந்தனை தோற்றியது.

கெடா மாநிலம் என்றாலே காடாரம் கொண்டான் ராஜேந்திர சோழனின் வரலாறுகள் தான் நமக்கு ஞாபகம் வரும்.

May be an image of 1 person, smiling and wedding

இப்போதே கெடாவில் அந்த வரலாறுகள் காணாமல் போய் கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில் இந்த வரலாறுகள் அழிந்து விடக்கூடாது.

இதன் அடிப்படையில் தான் இந்த ராஜேந்திர சோழனின் சிலை நிறுவப்பட்டதற்கான முக்கிய காரணம்.

இது வெறும் சிலை அல்ல. தமிழர்களின் வரலாற்று சின்னம். நமது அடையாளம்.

இங்கு வருபவர்கள் இது யாருடைய சிலை என்று ஆராய்வார்கள். குறிப்பாக இளையோர்கள் நமது முன்னோர்களின் வரலாற்றை தேடுவார்கள்.

இதன் மூலம் இன்னும் எத்தனை காலம் வந்தாலும் நமது வரலாற்றை அழிக்க முடியாது என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

May be an image of 7 people and temple

நாம் இந்த நாட்டிற்கு பிழைப்பு தேடி கூலியாக வந்தோம் என்று கூறுவதை அனைவரும் நிறுத்த வேண்டும்.

அதற்கு பதிலாக நாம் இந்த நாட்டை ஆள்வதற்கு வந்தவர்கள். வணிகம் செய்ய வந்தவர்கள் என்பதை சொல்லி பிள்ளைகளை வளருங்கள் என்று ராஜேந்திர சோழ சிலை திறப்பு விழாவில் டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

இந்த சிலையை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன

தொடர்புடைய செய்திகள்

+ - reset