செய்திகள் விளையாட்டு
மியாமி ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஃலோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார்.
இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.
போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.
போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது.
முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.
2-ஆவது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.
இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 28, 2024, 8:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 27, 2024, 11:39 am
மாட்ரிட் பொது டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அல்காரஸ் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
April 27, 2024, 7:28 am
IPL 2024: பஞ்சாபின் அதிரடியில் கல்கத்தா வீழ்ந்தது
April 26, 2024, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 25, 2024, 11:40 am
டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
April 25, 2024, 8:51 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி
April 25, 2024, 8:34 am