நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை முழுவதும் McDonald's உணவகங்களை மூட வணிக உயர் நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு:

இலங்கை முழுவதும் McDonald's உணவகங்களை மூட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 4 ஆம் திகதி வரை McDonald's உணவகங்களை  மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. 

உள்ளூர் உரிமையை வைத்திருப்பவர்கள் சர்வதேச சுகாதாரத் தரங்களை பின்பற்ற தவறியதாக McDonald's தலைமை நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

விசாரணை முன்னெடுக்கும் நிலையில் உணவகங்களை மூடப்படுகிறது என்றே நீதிமன்ற அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதனிடையே, உள்ளூர் நிறுவனமான அபான்ஸ் உடனான உரிமை ஒப்பந்தத்தை கடந்த வாரம் முறித்துக் கொண்டதாக McDonald's நிறுவனம் சார்பான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

1998ஆம்  இலங்கையில் McDonald's நிறுவனம் நுழைந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள அபான்ஸ் நிறுவனம் 12 கடைகளை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், இலங்கை முழுவதிலும் McDonald's உணவகங்கள் மூடப்பட்டுள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆனால் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset