நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

வாஷிங்டன்:

2023-ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் ஆசியப் நடிகை, டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவருக்கு அப்பதக்கத்தை வழங்கினார். 

எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (EEAAO) என்ற திரைப்படத்திற்காக அவர் அவ்விருதினைப் பெற்றார்.

சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் அமெரிக்க குடிமக்களுக்கு மட்டுப்படுத்தப்படாத பொதுமக்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் மொத்தம் 19 பேருக்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டது. 

மிஷ்ல் இயோவின் நடிப்பு பாலினம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றைக் கடந்து தனது நடிப்பின் மூலம் மக்களுக்கு முன் மாதிரியாகவும் செயல்படுவதாகவும் பைடன் கூறினார்.

மேலும், மிஷல் அமெரிக்க கலாச்சாரத்தை செழுமைப்படுத்தவும் உயர்த்தவும் ஒரு முன்மாதிரியாகச் செயல்படுவதை பைடன் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset