செய்திகள் மலேசியா
வீடு கட்டுவதில் சிக்கலை எதிர்நோக்கும் இந்தியக் குடும்பங்கள்
ஈப்போ:
பேரா மகிழம்பூ கம்போங் பாரு எனும் இடத்தில் வழங்கப்பட்ட நிலத்தில் அடிபடை வசதியில்லாததால் (கால்வாய், சாலை) 27 இந்தியக் குடும்பங்கள் முறையே வீடிகள் கட்டி குடியேற முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலைத் தெரிவித்தனர்
சுமார் 50 ஆண்டு காலமாக மகிழம்பூவில் உள்ள ஸ்ரீ் ராஐ ராஜேஸ்ரி ஆலய அருகில் இருந்த கம்போங் பாரு அரசாங்க நிலத்தில் வசித்து வந்தோம்.
எங்களுக்கு நிரந்தர நிலத்தை அரசாங்கம் வழங்க வாக்குறுதி அளித்தது. அதன் படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப் பட்டது.
அதில் அடிப்படை வசதிகள் இல்லை இதனால் இந்த நிலத்தில் இன்னமும் முறையே வீடு கட்டி கொள்ள இயலாமல் இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான பி. இளங்கோவன் கூறினார்.
இந்த நிலம் கிடைக்க பல ஆண்டுகள் நடத்தி வந்த போராட்டத்திற்குப் பின்னர் நிலம் கிடைத்து. அதில் இன்னமும் குடியேற இயலவில்லை.
இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று ஸ்ரீ ராஜ ராஜேஸரவரி ஆலயத்தில் நடைபெற்ற மகிழம்பு மஇகா ஆண்டுக் கூட்டத்தில் கலத்துகொண்ட பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். மோகன்,மகிழம்பூ மஇகா கிளைத் தலைவர் எம். விவேகனந்தனிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.
எங்களுக்கு வயதாகி விட்டது. வழங்கப்பட்ட நிலத்தில் குடியேற வேண்டும் என்று எங்களுடைய ஆசையை நிறைவேற்ற மாநில அரசாங்கம் உதவ வேண்டும் என்று எஸ். மீனாட்சி என்பவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலவரங்களை மகிழம்பூ சட்டமன்ற உறுப்பினரின் தொடக்கமாக கொண்டுச் சென்று வேண்டிய உதவிகள் வழங்க முயற்சிப்பதாக பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். மோகன் தெரிவித்தார்.
இங்கு நடைபெற்ற மகிழம்பூ மஇகா கிளைக் கூட்டத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
அந்த உதவிப் பொருட்களக வர்த்தக பிரமுகர் கேசவன் எடுத்து வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 12:02 pm
திரெங்கானுவில் சோகம்: நான்கு கார்கள் மோதிய விபத்தில் ஒன்பது மாதக் குழந்தை உயிரிழந்தது
October 30, 2025, 11:20 am
உலகின் 10ஆவது செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அங்கீகரிக்கப்பட்டார்
October 30, 2025, 10:19 am
1 மில்லியன் ரிங்கிட் சவாலுக்காக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மொட்டை அடித்துக் கொண்டார்
October 30, 2025, 10:02 am
கைரி மீண்டும் அம்னோவில் இணைகிறாரா?
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
