நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 

ஜெய்பூர்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் லக்னோ அணிகள் மோதுகின்றன. 

சாவாய் மன்சிங் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர்.

பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் விளாசினார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து லக்னோ அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டிகாக்- கேஎல் ராகுல் களமிறங்கினர்.

அதிரடியுடன் தொடங்கிய டிகாக் (4) முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த படிக்கல் 0, பதோனி 1, ஹூடா 26 என வெளியேறினர். இதனையடுத்து கேஎல் ராகுல் மற்றும் பூரான் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்ந்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் (58) அரை சதம் விளாசி வெளியேறினார்

கடைசி வரை போராடிய பூரான் 64 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset