நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவிடம் கடன் நிவாரணம் கேட்கும் மாலத்தீவு

மாலே:

மாலத்தீவுக்கு இந்தியா கடன் தள்ளுபடி அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் முஹம்மது மூயிஸ் வேண்டு கொண்டுள்ளார்.

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவதில் அவர் பிடிவாதமாக இருந்துவரும் நிலையில், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுமார் 400 மில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது

மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதியே இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்தியா மட்டுமின்றி வேறு எந்தவொரு நாட்டின் ராணுவம் மாலத்தீவில் இருந்திருந்தாலும், இதைத்தான் எனது அரசு செய்திருக்கும். இதில் வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை என்று மூயில் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில்,  இந்தியாவிடம் பெற்ற கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது. கடனை குறைத்தல், கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset