நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போர் நிறுத்த அமெரிக்க தீர்மானம்: ரஷியா, சீனா முறியடிப்பு

நியூயார்க்:

காசாவில் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை  வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியாவும், சீனாவும் ரத்து செய்தன.

இது அமெரிக்காவின் கண்துடைப்பு முயற்சி என்பதால் அதனை முறியடித்ததாக இரு நாடுகள் தெரிவித்தன.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்தக் கவுன்சிலில், தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன; 3 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன; ஒரு நாடு வாக்களிப்பைப் புறக்கணித்தது.

Russia and China veto US resolution calling for immediate Gaza ceasefire

பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவு இருந்தாலும், அந்தத் தீர்மானத்தை ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தன.

வாக்கெடுப்பு முன் ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் பேசுகையில், காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் ரஷியாவும் விரும்புகிறது.

ஆனால், அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்தத் தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா ஏமாற்றப் பார்க்கிறது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset