நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முஸ்லிம்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் 

சிங்கப்பூர்:

பிரதமர் லீ சியன் லூங் முஸ்லிம் சமூகத் தலைவர்களுடனும்  பொதுமக்களுடனும் நேற்று மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அல் அமீன் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 450 பேர் கூடினர்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்ற மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின்போது பள்ளிவாசல் தொண்டூழியர்களுடன் பிரதமர் லீ பேசினார்.

புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு திறக்கப்பட்டிருக்கும் தெலுக் பிளாங்கா (Telok Blangah) பள்ளிவாசலையும் பிரதமர் லீ சுற்றிப்பார்த்தார்.

முக்கிய தொழுகைக் கூடத்தில், 2,500க்கும் மேற்பட்ட ஆண்கள் தொழுகை மேற்கொள்ளலாம்.

மே மாதம் பள்ளிவாசலில் குடும்ப விழா நடைபெறும்.

அப்போது சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்கு அழைக்கபடுவர்.

ஆதாரம்: CNA படம்: BERITA mediacorp

தொடர்புடைய செய்திகள்

+ - reset