நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்

கொழும்பு:

கொழும்பு கட்டுநாயக விமானநிலையத்தில் விசா ( on-arrival visa) வழங்கும் செயற்பாடுகளை இந்திய நிறுவனமொன்று சர்ச்சைக்குரிய விதத்தில் பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து விமானநிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசா வழங்கும் நடவடிக்கைகளை பல வருடங்களாக சுமூகமான முறையில் முன்னெடுத்து வந்துள்ள நிலையில் புதிய நிறுவனம் மேலதிகமாக 25 டாலர்களை கட்டணம் விதித்துள்ளது.

வழமையான 75 டாலருக்கு அப்பால் இந்திய நிறுவனம் மேலதிகமாக 25 டொலர்களை அறிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற சுற்றுலா பயணிகளிடம் இருந்து இந்த நிறுவனம் 22 அமெரிக்க டாலர்களை அதிகப்படியாக இலங்கைக்குள் வருவதற்கு முன்பு வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset