நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு

தெஹ்ரான்: 

ஈரான் புரட்சிப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலின் எம்எஸ்சி ஏரீஸ் சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த 16 இந்தியர்கள் உள்பட அனைத்து மாலுமிகளையும் மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவித்தது.

ஏற்கெனவே ஓர் இந்தியப் பெண் மாலுமி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 20 நாள்களுக்குப் பிறகு மற்ற 24 மாலுமிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் புரட்சிப் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் கடந்த 6 மாதங்களாக நீடித்து வருகிறது.

ஹமாஸுக்கு ஆதரவாக  செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமன் நாட்டின் ஹூதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,போர்ச்சுகல் கொடி ஏற்றப்பட்ட இஸ்ரேலியருக்குச் சொந்தமான எம்எஸ்சி ஏரீஸ் சரக்குக் கப்பலை ஈரான் புரட்சி படையினர் கடந்த மாதம் 13ம் தேதி அதிரடியாக சிறைபிடித்தனர். இதில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர்.

17 இந்தியர்களில் கேரளத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணை மட்டும் விடுவித்தனர். 16 இந்தியர்கள் உள்பட கப்பலில் பணியிலிருந்த 24 மாலுமிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிராபக்துல்லாஹியன் கூறுகையில், இது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.

கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால், கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset