நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன்னுக்குப் புற்றுநோய்

லண்டன்:

பிரிட்டன் இளவரசி கேட் மிடல்டன் (Kate Middleton), ஆரம்பக்கட்ட புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

இளவரசர் வில்லியமின் மனைவி கேட், அவரின் உடல்நிலை குறித்த காணொலி  ஒன்றை வெளியிட்டார்.

கேட் மிடல்டன்னுக்கு வயது 42.

அவர் கடந்த ஜனவரியில் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து தமக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அது பேரதிர்ச்சியாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

எனினும் உடல்நலம் சீராகிவருகிறது என்றார் கேட்.

இத்தருணத்தில் தமக்கென நேரமும் தனிமையும் தேவை என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இளவரசி கேட் குணமடைய இளவரசர் ஹேரியும் இளவரசி மேகனும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கேட்டின் துணிச்சலைப் பாராட்டினார்.

வெள்ளை மாளிகையும் இளவரசி கேட்டுக்கு அதன் ஆதரவைத் தெரிவித்தது.

- AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset