நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகமே முதல் தேர்வாக இருக்க வேண்டும்: டத்தோ சிவம்

பூச்சோங்:

உயர் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகமே முதல் தேர்வாக இருக்க வேண்டும்.

பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ ஏபி சிவம் இதனை கூறினார்.

சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இவ்வாலயம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் 7ஆவது ஆண்டாக அரசாங்க பல்கலைக்கழகங்களே எங்களின் முதன்மை தேர்வு எனும் நிகழ்வு நடத்தியது.

70க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன் பெற்றனர். 

அரசாங்க பல்கலைக்கழகங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று டத்தோ சிவம் கூறினார்.

ஆலயத்துடன் இணைந்து கியூமிக், தொண்டன் ஆகிய அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

தற்போது யூபியூ பதிவுகள் நடந்து வருகிறது. அராசாங்க பல்கலைக்கழகங்களில் இணைவது தான் இந்த பதிவாகும்.

இந்த வாய்ப்பை இந்திய மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும் போது அது சரியாக இருக்க வேண்டும்.

காரணம் பல விண்ணப்பம் இதன் காரணமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆகவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் விழிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பட்டுக் குழுத் தலைவரும் ஆலய செயலாளருமான மோகன் குமார் ராஜூ கூறினார்.

சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மாபெரும் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்ய நல்லுள்ளங்கள் பொது மக்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கட்டடக் குழுத் தலைவர் பாஸ்கரன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset