நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் குடியுரிமை கூட்டமைப்பு  (MCRA) குடியுரிமை சட்டத்திருத்தை மீளாய்வு செய்வதற்காக காத்திருக்கிறது: சரவணன் சின்னப்பன்

கோலாலம்பூர்:

அமைச்சரவையில் இன்று உள்துறை அமைச்சு குடியுரிமை சட்டத்திருத்தங்களை மீள்ளாய்வு செய்வதற்கான அவசியத்தைக் கருத்தில் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார். 

அத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள பரிசீலனைகளையும் உள்துறை அமைச்சு கருத்தில் கொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலில், மலேசிய அரசியலமைப்பு சட்டதின் கீழ் அனைவருக்கும் சமயுரிமை வழங்கும் சட்டபிரிவு 8-யை நிறைவு செய்யும் வண்ணம் மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்குச் சட்டப்பிரிவு 14(1)(b) பிரிவு 1(b) மற்றும் 1(c) பகுதி 2 அட்டவணை 2-ன் கீழ் தாயின் குரியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட திருத்தம்உறுதி செய்யப்பட்டு அமல்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, மலேசியாவில் பிறந்த குழந்தைகள் மற்றும் எந்தவொரு குடியுரிமையும் இல்லாக குழந்தைகளுக்குத் தானாக மலேசியக் குடியுரிமை வழங்கும் சட்டப்பிரிவு 19(b), பகுதி III இரண்டாம் அட்டவணை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மேலும், திருமணத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள், குடியுரிமையில்லாமல் மலேசியர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகள் உட்பட வருங்கால சந்ததிக்கும் பாதுகாப்பு வழங்கும் சட்டப்பிரிவு 1(e) பகுதி II இரண்டவது அட்டணை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, சட்டபிரிவு 1(e) பகுதி இரண்டு அட்டவணையில் நிரந்தரமாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்ற வார்த்தை நிலை நிறுத்தப்படவேண்டும். இதனால், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மலேசியக் குடியுரிமை பெற வழிசெய்யும்.

தாங்கள் முரண்படும் இந்த அவசரமான, பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டதிருத்தங்கள் தொடர்பாக அமைச்சு எவ்விதமான மாற்றங்கள் கொண்டுவரக்கூடும் என்பதை காண விழைவதாக சரவணன் குறிப்பிட்டார். 

மலேசிய எல்லை பகுதிகளில் குறிப்பாக, தென் பகுதிகளில் கட்டுபாடில்லாத புலம் பெயர்வுகள் பிரச்சனைகளைக் கையாள்வதின் முக்கியத்திவத்தைத் தனது தரப்பு உணர்த்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

அது குறித்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் உண்டு.

ஆனால், அதற்கான தீர்வு அப்பிரச்சனைகளுக்கான காரணிகளான எல்லை பகுதிகளில் பலவீனமான காவல், அந்நியத் தொழிலாளர்களை நம்பி இயங்கும் தொழில் துறை, பரவலாக உள்ள லஞ்சம் வாங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைப்பதே ஆகும். 

அதை விடுத்து அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்து மலேசிய குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பது அடிப்படை பிரச்சனைகான தீர்வாகாது.

விதிமுறைகள் அல்லது நிர்வாக சுற்றறிக்கைகள் மூலம் தீர்வுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் முயல்கிறது என்றால், இவை பகிரங்கமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி ஒப்புதல் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

வலுவான தகவல்கள் இல்லாமல், இதனால் ஏற்படவிருக்கும் உடனடி மற்றும் வருங்கால விளைவுகள் பற்றிய புரிதல் இல்லாமல்; தற்போது உள்ள குடியுரிமை தொடர்பான அடிப்படை உரிமைகளை குறைக்கும் அல்லது நீக்கும் எந்தவொரு சட்டமாற்றத்தையும் மலேசிய அரசியலமைப்பு சட்டதில் செய்வதில் அவசரம் காட்ட கூடாது என்பதையே தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset