நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நீடிக்க வேண்டும்: கூட்டரசுப் பிரதேச மஇகா வலியுறுத்து

கோலாலம்பூர்:

மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து  நீடிக்க வேண்டும்.

இதற்கு கூட்டரசுப் பிரதேச மஇகா முழு ஆதரவை வழங்குகிறது என்று அதன் தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.

மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் மஇகாவின் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 220 கிளைகளும் முழு ஆதரவை வழங்குகின்றன.

2018 பொதுத் தேர்தலுக்கு பின் இக்கட்டான சூழ்நிலையில் கட்சிக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையேற்றார்.

கடும் அறைகூவல்களுக்கு மத்தியில் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். கட்சிக்கு அதிக சொத்துகளை சேர்த்தவரும் அவர் தான்.

அவரின் தலைமைத்துவமும் கட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான் கூட்டரசுப் பிரதேச மஇகா இந்த முடிவை எடுத்தது என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.

மஇகாவில் முதல் தேர்தல் தலைவருக்கானது. அதன் அடிப்படையில் கூட்டரசுப் பிரதேச மஇகா இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

துணைத் தலைவருக்கான தேர்தல் நடக்கும் போது கூட்டரசுப் பிரதேச மஇகா பகிரங்கமாக டத்தோஸ்ரீ சரவணனுக்கு ஆதரவு வழங்கும்.

துணைத் தலைவர் பதவிக்கு அவருக்கு நிகர் அவரே என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset