நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளியலறையில் படுத்திருந்த கிங் கோப்ரா 

சிக்:

சுங்கை பாவ், கம்போங் பத்து 2-வில் ஒரு வீட்டின் குளியலறையில்  கிங் கோப்ரா வகை பாம்பு இருப்பதை கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். 

அதைத் தொடர்ந்து, கிங் கோப்ரா பாம்பைப் பிடித்துச் செல்ல குடியிருப்பாளர்கள் பொது பாதுகாப்பு படையினரைத் தொடர்பு கொண்டனர். 

நேற்றிரவு 10.22 மணியளவில் பாம்பு இருப்பது குறித்துத் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சிக் மாவட்டப் பொது பாதுகாப்பு படை அதிகாரி, லெவ்டனன் ஹைசுல் ஆயிஷா முஹம்மத் நாபியா தெரிவித்தார். 

இதனையடுத்து, அந்தக் குடியிருப்பு பகுதிக்கு விரைந்த பொது பாதுகாப்பு துறை உறுப்பினர்கள், அங்குப் பாம்பு இருப்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் கூறினார்.

நான்கு மீட்டர் நீளமுள்ள கிங் கோப்ரா பாம்பு மிகவும் விஷத்தன்மை கொண்டதால் அப்பாம்பைப் பிடிக்க தங்கள் உறுப்பினர்கள் சுமார் 30 நிமிடங்கள் எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். 

பாம்பு தப்பிச் சென்று குடியிருப்பாளரின் வீட்டின் சுவரிலுள்ள விரிசலில் ஒளிந்து கொள்ள முயன்றதை அடுத்து தங்கள் உறுப்பினர்கள் பாம்பை பிடிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.

சிக் வனப்பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அந்தப் பாம்பு மீண்டும் சிக் மாவட்ட ஏபிஎம் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக ஹைசுல் ஐஸ்யா கூறினார்.

இதற்கிடையில், வெப்பமான வானிலையால் இது போன்ற விலங்குகள் வீடுகளில், குறிப்பாக குளியலறைகள், படுக்கையறைகள் மற்றும் படுக்கைகளுக்கு அடியில் தங்குமிடங்களுக்கு வருவதால், பொதுமக்கள் விழிப்புடனும் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பாம்புகள் நடமாட்டம் மற்றும் பலவற்றில் ஏதேனும் அவசர வழக்குகள் இருந்தால், பொதுமக்கள் 04 469 8221 என்ற எண்ணில் ஏபிஎம் சிக்கை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset