
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் 4 முனைப் போட்டி: இன்றுமுதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது
சென்னை:
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக தலைமையிலான கூட்டணிகள் போட்டியிடுவதால் நான்கு முனைப் போட்டி தமிழகத்தில் உருவாகியுள்ளது.
இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் திமுக இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது.
அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்கிறது.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையைக் கடந்த சனிக்கிழமை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.
மொத்தம் 7 கட்டங்களாக வாக்கு பதிவு நடத்தப்படும் என்றும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 28ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் என்றால் பெடாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 12:48 pm
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
October 20, 2025, 11:11 am
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்
October 19, 2025, 4:18 pm
ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
October 19, 2025, 9:48 am
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் பயணம்
October 18, 2025, 10:52 pm
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
October 18, 2025, 8:49 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
October 17, 2025, 1:53 pm
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
October 15, 2025, 12:39 pm