நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

150 குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா வழங்கியது

ஈப்போ:

எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா ஆதரவுடன் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

சுங்கை சிப்புட் அம்னோ மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

எஹ்சான் குழுமத்தின் நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித்  இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்து அன்பளிப்புகளை வழங்கினார்.

தமது நிறுவனம் கடந்த 30 ஆண்டு காலமாக இந்த சேவை வழங்கி வந்தாலும்  இம்மாநிலத்தில். கடந்த நான்கு ஆண்டு காலமாக கிம்மா கட்சியுடன் இணைந்து வறுமை நிலையில் உள்ள இந்திய முஸ்லிம் சமுகத்தினரை அடையாளம் கண்டு இந்த சேவையை வழங்கி வருவதாக டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.

நாடு முழுவத்திலும் 5 ஆயிரம் பேருக்கு இந்த அன்பளிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் தொடக்கமாக பேரா சுங்கை சிப்புட்டில் இந்த அன்பளிப்புகளை வழங்கியுள்ளதாக நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

May be an image of 8 people

இந்த சேவையை வழங்க வாய்ப்புகளை வழங்கிய இறைவனுக்கு நன்றியை கூறிக்கொண்ட அவர்,  சமுக அமைப்புகள், தனியார் நிறுவனங்களும் வறுமை நிலை மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்குவதின் வழி பெருநாள் காலங்களில் ஏற்படும் அவர்களது குடும்ப சுமையை குறைக்க உதவும் என்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கும்  அன்பளிப்பு வழங்கப்பட்டது.

May be an image of one or more people and headscarf

இதில் தேசிய, மாநில நிலையில் உள்ள கிம்மா கட்சியின் முக்கிய தலைவர்களான துவான் ஹாரிஸ், டத்தோ அன்வர் சதாத், ஹுசைன் ஜமால் உட்பட கலந்துகொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset