நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு 32 கட்சிகள் ஆதரவு, 15 கட்சிகள் எதிர்ப்பு

புது டெல்லி: 

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு 32 கட்சிகள் ஆதரவளித்துள்ளன. 15 அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்களவை, பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு சமர்ப்பித்தது.

அதில், 62 கட்சிகளிடம் கருத்து கேட்டதாகவும், 47 கட்சிகள் பதிலளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்:  காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக,  சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், நாகா மக்கள் முன்னணி

ஆதரவு தெரிவித்த கட்சிகள்:
பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், மிஸோ தேசிய முன்னணி, அஸ்ஸாம் கண பரிஷத்.

பதிலளிக்காத கட்சிகள்:
பாரத ராஷ்டிர சமிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரள காங்கிரஸ் (எம்), தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிச கட்சி, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் பதிலளிக்கவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset