நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புயலைக் கிளப்பும் தேர்தல் நன்கொடைப் பத்திர விவரங்கள் வெளியீடு

புது டெல்லி: 

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் ஆளும் பாஜகவுக்கு 22 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் பாஜகவுக்கு ரூ.6000 கோடிக்கு மேல் பெற்றுள்ளதால் இந்த விவகாரம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் நன்கொடை அளித்த பல்வேறு நிறுவனங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி உள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த நிறுவனங்களின் நன்கொடைகளை பாஜக மட்டுமே பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதிகமான நன்கொடை அளித்த முதல் நிறுவனமான தமிழகத்தின் லாட்டரி அதிபரான மார்ட்டினின் Future Gaming and Hotel Services PR நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திலும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதிக தொகை அளித்த முதல் பத்து நிறுவனங்கள்

* Future Gaming and Hotel Services PR - ₹ 1,368 crore
Megha Engineering & Infrastructures Ltd - ₹ 966 crore

* Qwik Supply Chain Pvt Ltd - ₹ 410 crore

* Vedanta Ltd - ₹ 400 crore

* Haldia Energy Ltd - ₹ 377 crore

* Bharti Group - ₹ 247 crore

* Essel Mining & Industries Ltd - ₹ 224 crore

* Western UP Power Transmission Company Ltd - ₹ 220 crore

* Keventer Foodpark Infra Ltd - ₹ 195 crore

* Madanlal Ltd - ₹ 185 crore

உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்து
எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்த தேர்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்களை, பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் என  தனித்தனியாக இரு பட்டியல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஆர்எஸ், சிவசேனை, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜவாதி உள்பட அனைத்துப் பிரதான கட்சிகளும் இப்பத்திரங்களை பணமாக மாற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset