நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக்டோக் கணக்குகளை முடக்க அரசுக்கு அதிகாரம் இல்லை: ஃபஹ்மி பட்சில் 

சைபர் ஜெயா:

எந்தவொரு டிக்டோக் கணக்கையும் முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக பயன்பாடு அரசாங்கத்தின் உரிமை அல்ல.

அதில் ஏதேனும் உள்ளடக்கம் அகற்றப்படுவது அல்லது தடுக்கப்படுவது தனது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

எந்தவொரு தளத்தையும் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் செய்யுமாறு கேட்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தனது அமைச்சு தற்போது சமூக ஊடகங்களின் நிறுவனத்துடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மலேசியப் பல்லூடக ஆணையம் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளடக்கத்தை அகற்றுமாறு கோரியிருந்தாலும், அந்த முடிவுவைச் சம்பந்தப்பட்ட அந்த சமூக ஊடகம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார். 

சமூக ஊடகங்கள் சில உள்ளடக்கத்தை அகற்றுவதைத் தனது தரப்பிற்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லையென்றும் சுட்டிக் காட்டினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் ​​புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் அவர் அளித்த பதிலில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் ஃபஹ்மி விளக்கினார்.

பதிவேற்றிய சில உள்ளடக்கங்கள் தடுக்கப்பட்டதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காதது போல் ராட்ஸி நினைத்ததாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset