நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடர்ந்து பராமரிக்கப்படும்: கல்வி அமைச்சர்

கோலாலம்பூர் : 

மலாய் மொழியின் தேசிய மொழி என்ற அந்தஸ்தைத் தொடர்ந்து கண்ணியப்படுத்தி, பராமரிக்கவும் அரசு உறுதியாக உள்ளது.

கல்வியமைச்சர் தலைமையில் தேசிய மொழி அமலாக்கக் குழு ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

இந்தக் குழு அனைத்து அமைச்சகங்களும் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டன. 

அவை தேசிய மொழியின் பயன்பாட்டை அனைத்து மட்டங்களிலுமுள்ள அரசு துறைகள், முகமைகள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகள் பயன்படுத்துவதைக் கண்காணிக்கின்றன.

மலாய் மொழியை மேம்படுத்தவும், கண்ணியப் படுத்தவும் திட்டங்கள் முன் முயற்சிகளுக்கு முழு கவனம் செலுத்துமாறு மொழி மற்றும் நூலகக் கழகத்திற்கு (DBP) தாம் உத்தரவிட்டுள்ளதாக ஃபட்லினா சீடேக் கூறினார்.

கல்வி அமைச்சின் மட்டத்தில், அனைத்து குழுவிற்கும் மலாய் மொழி முக்கியமான ஒன்றாகும்.

நமது குழந்தைகள் மலாய் மொழி பேசுவதை உறுதி செய்வதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. 

இத்திட்டத்தில் தேசிய மொழி நட்சத்திர மதிப்பீடு அமைப்பு உள்ளது. இது பொதுத் துறைக்கான தேசிய மொழியின் பயன்பாட்டின் நிலை மற்றும் தரத்தை மதிப்பிடுகிறது.

இந்த மதிப்பீட்டு முறையானது வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளூர் அதிகாரசபைகள் (பிபிடி) மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset