நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜம்மு காஷ்மீரில் பேரவைத் தேர்தலையும் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

ஸ்ரீநகர்:

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு ஜம்மு காஷ்மீரில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளது.  

தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், ஆத் ஆத்மி கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அந்தக் குழு ஆலோசனை நடத்தியது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் நசீர் அஸ்லாம் வாணி கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும்.. கடந்த 10 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்துள்ளனர் என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம் என்றார்.

மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம் என பிடிபி தலைவர் குலாம் நபி லோன் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset