நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை சமர்ப்பித்தது எஸ்பிஐ

புதுடெல்லி:

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான  விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்தது. இந்தவிவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வரும்15-ம் தேதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் 2017-18 மற்றும் 2021-22-க்கு காலகட்டத்தில் 7 தேசியக் கட்சிகளும் 24 மாநிலக் கட்சிகளும் ரூ.9,188 கோடியை பெற்றுள்ளன. இதில் பாஜகவின் பங்கு மட்டும் ரூ.5,272 கோடி.

காங்கிரஸ் ரூ.952 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் தேர்தல்பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் கருப்பு பணத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் 2019 முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க எஸ்பிஐக்கு உத்தரவிட்டது

இதற்கு, ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் கோரிய  எஸ்பிஐயின் மனுவை மார்ச் 11-ம் தேதி தள்ளுபடி செய்த 24 மணி நேரத்தில் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset