நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஸிம் கும்பல் கொலை: 10 பேருக்கு ஆயுள் தண்டனை

ஹப்பூர்:

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி காஸிமை கும்பல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு உ.பி.யின் ஹபூர் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்வேதா தீட்சித் அளித்த தீர்ப்பில் 45 வயதான காசிமைக் கொன்றது மற்றும் பசுவதைப் பொய்யான வதந்தியின் பேரில் சமைதீன் (62) என்பவரைத் தாக்கியதாக 10 பேர் குற்றவாளிகள் என்று தெரிவித்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ், ஹரி ஓம், யுதிஷ்டிர், ரிங்கு, கரன்பால், மணீஷ், லலித், சோனு, கப்டன் மற்றும் பஜைதா கிராமத்தைச் சேர்ந்த மங்கே ராம் ஆகியோருக்கு நீதிமன்றம் தலா 58,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2018 இல், பாஜைதா கிராமத்தில் வசித்த காசிம் தடைசெய்யப்பட்ட மாட்டை அறுத்ததாகக் குற்றம் சாட்டி ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்றது.

பசுவதை என்ற பொய்யான வதந்தியால் சமைதீனும் தாக்கப்பட்டார்.  ஆனால் காயங்களுடன் தப்பினார்.

இந்த சம்பவத்தை மோட்டார் சைக்கிள் விபத்து கோணத்தில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் சமைதீன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பிறகு, விசாரணை சரியான பாதைக்கு மாற்றப்பட்டது என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset