நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏழாம் தலைமுறை இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களுக்கும் OCI அங்கீகாரம்: குடியரசுத் தலைவா் திரௌபதி

போா்ட் லூயிஸ்: 

ஏழாம் தலைமுறை இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களுக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் (ஓசிஐ) அங்கீகாரம் அளிப்பதற்கான சிறப்பு பரிந்துரைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு  செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். 

மோரீஷஸ் நாட்டுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு 3 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். 

மோரீஷஸின் சுதந்திர தினமான மாா்ச் 12-ஆம் தேதியன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்ட அந்த நாட்டின் 56-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்றாா். 

தொடா்ந்து, அந்நாட்டு பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்துடன் அரசு விருந்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையில், ‘மோரீஷஸின் புனித இடமாகக் கருதப்படும் கங்கா தலாவ் வளாகத்தை மத, கலாசார மற்றும் சுற்றுலா மையமாக மறுசீரமைப்பதில் மோரீஷஸ் அரசுக்கு இந்தியா ஆதரவளிக்கும். 

ஏழாவது தலைமுறையைச் சோ்ந்த இந்திய வம்சாவளி மோரீஷஸ் நாட்டவா்களும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினா் (ஓசிஐ) அங்கீகாரம் பெறுவதற்கான சிறப்பு பரிந்துரைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வம்சாவளியினா் அவா்களின் முன்னோா்களின் நிலத்துடன் மீண்டும் இணைவதற்கு இது பெரிதும் உதவும். கடந்த சில நாள்களுக்கு முன், நமது இருநாட்டு பிரதமா்களும் இணைந்து ‘யுபிஐ’ ற்றும் ‘ரூபே காா்டு’ பரிவா்த்தனை அமைப்புகளை மோரீஷஸில் அறிமுகப்படுத்தினா்.

மேலும், 6 சமூக நலத்திட்டங்களுடன் ஒரு புதிய விமான ஓடுதளம் மற்றும் ஒரு படகுத் துறையும் அவா்கள் திறந்து வைத்தனா். நமது இரு நாட்டு அரசுகளும் ஒருவருக்கொருவா் அளித்துக் கொண்ட முக்கியத்துவம் மற்றும் இருதரப்பு உறவில் செலுத்திய கவனம் அதன் வேகமான முன்னேற்றத்தில் பங்காற்றியது.   நமது சிறப்பு வாய்ந்த உறவுகள் தொடா்ந்து செழிப்படைய பிராா்த்திக்கிறேன். 

மிக மோசமான இன்னல்களை எதிா்கொண்டு, உழைப்பாலும் தியாகத்தாலும் இந்த நாட்டைக் கட்டமைத்தை இந்திய மற்றும் மோரீஷஸ் முன்னோா்களுக்கு நான் தலைவணங்குகிறேன். சுதந்திரமான 56 ஆண்டுகளில் முன்னணி ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ள மோரீஷஸின் பொருளாதாரம், ஆப்பிரிக்க கண்டத்தை மட்டுமின்றி முழு உலகையும் ஊக்குவிக்கிறது.

பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தின் உறுதியான தலைமைக்காகவும், நமது இருதரப்பு கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான அவரது அரசின் அா்ப்பணிப்புக்காகவும் எனது பாராட்டுகள்’ என்றாா்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset