நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பையும் மீறி CAA அமல்

புது டெல்லி:

இந்தியாவில் முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான அறிவிக்கையையும் அரசிதழலில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு வெளியிட்டிருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, 2014க்கு முன்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது.

1955-ம் ஆண்டு அமலில் இருந்த குடியுரிமைச் சட்டத்தில் பாஜக தலைமையிலான ஒன்றிய கடந்த 2019-ம் ஆண்டில் சில மாற்றங்களை செய்து மசோதாவாக நிறைவேற்றியது.

அதன்படி, அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இச்சட்டத்தின் சாராம்சம்.

இதில் முஸ்லிம்களும் இலங்கை த் தமிழர்களும் சேர்க்கப்படாததற்கு அந்தச் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அரசு எந்நேரமும் கட்டவிழ்க்கலாம் என்று அச்சம் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்திலும் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்தப் போராட்டத்தில் வன்முறையை வெடித்ததால் ஒன்றிய அரசு சிஏஏ அமலாக்கத்தை தள்ளி வைத்தது.

தற்போது தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் இதை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset