நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

26 நாள்கள் என்ன செய்தீர்கள்? தேர்தல் பத்திர விவரங்களை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய எஸ்பிஐக்கு உத்தரவு

புது டெல்லி:

தேர்தல் பத்திர விவரங்களை செவ்வாய்க்கிழமைக்குள் (மார்ச் 12) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த உத்தரவு பிறபித்து 26 நாள்களாகியும் என்ன செய்து கொண்டீர்கள் என்று எஸ்பிஐயை கடுமையாக விமர்சித்தது.

இதுதொடர்பாக ஜூன் 30 வரை அவகாசம் கேட்ட எஸ்பிஐ தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்றும் இது கருப்புப் பணத்தை ஒழிக்காது என்றும் கூறி உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்து இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதற்கு ஜூ30 வரை அவகாசம் கேட்டது எஸ்பிஐ. இந்த திட்டத்தில் ஆளும் பாஜக தான் அதிபடியாக ரூ.6 ஆயிரம் கோடி பெற்றிருப்பதால் இதை தேர்தல் முடிவதற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

எஸ்பிஐக்கு எதிராக வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போதுல  நீதிபதிகள், இது மிகவும் சுலபமான விஷயம். இதற்கு முன்பும் இதேபோன்ற வங்கி விவரங்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன்?.

மும்பையில் உள்ள எஸ்பிஐயின் தலைமை அலுவலகத்தில் தான் சேகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கின்றன. அவர்கள் நீதிமன்றத்தில் அதை சமர்ப்பித்துள்ளனர். அப்படி இருக்கும்போது எஸ்பிஐ மட்டும் அவகாசம் கேட்பது ஏன்?

பட்டியலை வெளியிட தீர்ப்பு வழங்கி 26 நாட்கள் ஆகிவிட்டன. கடந்த 26 நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள். வங்கி தரப்பில் இருந்து நேர்மையான செயல்பாட்டை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இணையதளம் உள்ள இந்த காலகட்டத்தில் தகவலை திரட்டுவது முடியாத காரியமா என்ன? 24 மணி நேரத்துக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய ஐந்து நீதிபதிகள் அமர்வு எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம் தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset