நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தாய்லாந்து நாட்டினர் உள்பட 12 தப்லீக் ஜமாத்தினரை விடுவித்தது உ.பி. நீதிமன்றம்

பரேலி:

போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர், 9 தாய்லாந்து நாட்டினர் உள்பட 12 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை கரோனா விதிமீறல் வழக்கிலிருந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

தில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 2020 மார்ச் மாதம் தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், உள்நாட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த  9,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மாநாடு முடிந்ததும், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். அந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் ஊரடங்கு உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தன. இதனால் பல்வேறு மாநிலங்களிலும், தில்லி மர்க்கஸிலும் இருந்த தப்லீக் ஜமாத்தினர் அங்கேயே தங்கிவிட்டனர்.

ஆனால், இந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் மூலம்தான் கொரோனா பரவல் அதிகரித்ததாக ஆளும் பாஜக அரசின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர்.

இதற்கிடையே, ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அதுபோல, உத்தர பிரதேச மாநிலம் சஜன்பூரில் உள்ள ஒரு மசூதியில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 9 பேர், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் என தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 12 பேரை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பெருந்தொற்று சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வெளிநாட்டினர் சட்டம், கடவுச் சீட்டு சட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பரேலி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அவர்கள் 12 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Courts in UP, Tamil Nadu, MP Order Release of Foreign Tablighis; Delhi High  Court Issues Notices to the Centre, Delhi Police & Delhi State Govt On  Foreign Tablighis Stranded In National Capital

இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்குரைஞர் மிலன் குமார் குப்தா கூறுகையில், "இந்த வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 12 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்' என்றார்.

பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாட்டைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஊரடங்கு காலத்தில் ஏராளமான இன்னல்களை அவர் சந்தித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset