நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இலங்கைக்கு இந்தியா ரூ.237 கோடி நிதி ஒதுக்கீடு

கொழும்பு:

இலங்கையின் கிழக்கு மாகாண வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா ரூ.237.1 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதுதொடர்பாக கொழும்பில்  செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்தா ஜெதிஸ்சா, கல்விப் பணிகளுக்காக ரூ.31.5 கோடி, சுகாதாரப் பணிகளுக்கு ரூ.78 கோடி, வேளாண்மைத் துறைக்கு ரூ.62 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் உள்ளிட்டவை இத்திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்படும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset