நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மன்மோகன் சிங்குக்கு உலகத் தலைவர்கள் புகழஞ்சலி

நியூயார்க்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தின.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வெளியிட்ட அறிக்கையில், பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது உலக அளவிலும் பல்வேறு பலன்களை அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்திய - அமெரிக்க நல்லுறவை மேம்படுத்துவதில் மன்மோகன் சிங் ஒரு சாதனையாளராகத் திகழ்ந்தார். கடந்த இருபது ஆண்டுகளாக இரு நாடுகளும் இணைந்து படைத்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் மன்மோகன் சிங்தான் என்றார்.

பாகிஸ்தான் துணைப் பிரதமர் இக்பால் தார்.மன்மோகன் சிங் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த அவர் வெகுவாக முயற்சிகளை மேற்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset