நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: அசாதுதீன் ஒவைசி நீதிமன்றம் சம்மன்

புது டெல்லி:

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியதற்காக மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசிக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜூன் 25ம் தேதி ஒவைசி நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது ஜெய் பாலஸ்தீன் என்று அவர் கோஷமிட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவரது முழக்கம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, தனது முழக்கத்தை நியாயப்படுத்தி பேசினார்.

இதைச் சுட்டிக்காட்டி பரெய்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வீரேந்திர குப்தா என்பவர் ஒவைசிக்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதை ஏற்ற நீதிமன்றம் ஒவைசி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset