நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

புது டெல்லி:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 92

இரண்டு முறை பிரதமராகவும், ரிசர்வ வங்கியின் ஆளுநராகவும், பொருளாதார உயர் பதவிகளையும் அவர் வகிக்துள்ளார்.

அவரது மறைவுக்கு ஒன்றிய அரசு 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்படு்ம என்று அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து சுயநினைவுற்ற நிலையில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மன்மோகன் சிங் வியாழக்கிழமை மாலை 8.06க்கு அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சை பலனின்றி இரவு 9.51 மணிக்கு காலமானார். . மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset